குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! 

Photo of author

By Parthipan K

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! 

Parthipan K

Group 3 A District Name Release! Notification issued by TNPSC!

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!

டின்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் ,பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 3ஏ தேர்வானது நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஒருகிங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்3 ஏ பணிகளுக்கான தேர்வு அடுத்த மாதம் 28 ஆம் தேதி நடக்க உள்ளது.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் தேர்வு மையங்களிலும் தேர்வானது நடத்தப்பட இருந்தது.அரியலூர் ,செங்கல்பட்டு ,விருதுநகர் உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 28.01.2023 முற்பகல் மூன்று மணி நேரம் இந்த தேர்வானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு  நிர்வாக காரணங்களால் தற்போது 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு நடத்தப்பட உள்ளது.

அந்தவகையில் தமிழகத்தில்  சென்னை ,மதுரை ,கடலூர் ,காஞ்சிபுரம் ,நாகர்கோவில் ,புதுக்கோட்டை ,சிவகங்கை,தஞ்சாவூர்,ஊட்டி,திருச்சி, வேலூர், ராமநாதபுரம்,திருநெல்வேலி ,சேலம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் குரூப் -3 ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.