8 மாதங்களுக்குப் பிறகு குரூப் 4 தேர்வு முடிவு! தேர்வர்களுக்கு ஷாக் கொடுத்த இணையதளம்!

Photo of author

By Parthipan K

8 மாதங்களுக்குப் பிறகு குரூப் 4 தேர்வு முடிவு! தேர்வர்களுக்கு ஷாக் கொடுத்த இணையதளம்!

Parthipan K

Group 4 exam result after 8 months! The website gave a shock to the candidates!

8 மாதங்களுக்குப் பிறகு குரூப் 4 தேர்வு முடிவு! தேர்வர்களுக்கு ஷாக் கொடுத்த இணையதளம்!

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் ஆறு வகையான பணியிடங்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி முதலில் 7,31 பணியிடங்களுக்கு முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த பணியிடங்களுக்கு 22 லட்சத்து 2942 பேர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் எழுத்து தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால் விண்ணப்பித்திருந்தவர்களில் 18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என கூறப்பட்டது. ஆனால் தேர்வு முடிவு அக்டோபர் மாதத்தில் வெளியாகவில்லை.

அதனை தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டது. ஆனால் டிசம்பர் மாதத்திலும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. அதனால் தேர்வர்கள் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என மீம்ஸ் போட்டு அவர்களின் ஆதங்கத்தை தெரிவித்து வந்தனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவு வெளியாகுவதில் ஏற்படும் தாமதற்கான காரணத்தையும் மார்ச் மாதத்துக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்பதையும் டிஎன்பிஎஸ்சி திட்டவட்டமாக தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி மார்ச் மாதத்துக்குள் நிச்சயம் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து 7,3௦1 காலி பணியிடங்களை 10 ஆயிரத்து 117 இடங்களாக அதிகரித்தும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தெரிவித்ததின்படி குரூப் 4 பதிவுகளுக்கான எழுத்து தேர்வு முடிவு நேற்று வெளியிட்டுள்ளது.

சரியாக எட்டு மாதங்களுக்குப் பிறகு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வு முடிவு வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்வுகள் மதிப்பெண் மற்றும் தரவரிசியை பார்ப்பதற்காக www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளங்களை ஒரே நேரத்தில் அணுகியதால் அவை முடங்கியது.

இதனால் தேர்வுகள் தேர்வு முடிவு பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இணையதளம் முடங்கியதால் எத்தனை பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள், ஒரு பணியிடங்களுக்கு எவ்வளவு பேர் போட்டி, கட் ஆப் மதிப்பெண்கள் எந்த அளவுக்கு செல்லும் போன்றவைகள் நேற்று இரவு வரை கணிக்க முடியாமல் இருந்தது.