பெண் ஊழியர்களுக்கு இந்த விடுப்பு இனி இல்லை! மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி வெளியிட்ட தகவல்!

0
139
this-leave-is-no-more-for-women-employees-information-released-by-union-minister-smriti-rani
this-leave-is-no-more-for-women-employees-information-released-by-union-minister-smriti-rani

பெண் ஊழியர்களுக்கு இந்த விடுப்பு இனி இல்லை! மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி வெளியிட்ட தகவல்!

மதுரை தொகுதி மக்களவை எம்பி வெங்கடேசன் மத்திய அரசால் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிலக்கு கால விடுப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரித்தி ஸ்மிரிதி ராணி நேற்று எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் மத்திய அரசு பணிகள் விதிகள் 1972ல் மாதவிலக்கு விடுமுறைக்கான எந்த ஒரு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

இந்த விதிகளில் அத்தகைய விடுமுறையை சேர்க்க தற்போது எந்த மொழிவும் இல்லை ஏற்கனவே மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு அரை, ஊதிய விடுப்பு கூடுதல், சாதாரண விடுப்பு குழந்தை பராமரிப்பு விடுப்பு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட விடுப்பு மகப்பேறு விடுப்பு மருத்துவ சான்றிதழ் விடுப்பு மற்றும் நிலுவை இல்லா இடுப்பு என பல விடுமுறைகள் கிடைத்து வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் தமிழ்நாட்டில் மாணவர்களின் நலனை கருதி மாதவிடாய் மற்றும் மகப்பேறு கால விடுமுறை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கும் மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் விடுமுறை அளித்து பிறப்பித்துள்ளது. இது பெரிதும் வரவேற்கத்தக்கதாக உள்ளது என தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K