துளசி செடியை வீட்டில் வளர்ப்பது கட்டாயம்! அதில் உள்ள மகத்துவம் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

Photo of author

By Parthipan K

துளசி செடியை வீட்டில் வளர்ப்பது கட்டாயம்! அதில் உள்ள மகத்துவம் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

Parthipan K

துளசி செடியை வீட்டில் வளர்ப்பது கட்டாயம்! அதில் உள்ள மகத்துவம் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

துளசிச் செடியில் பொதுவாகவே மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. அதற்கு சமமான அளவில் ஆன்மிக மகத்துவமும் நிறைந்துள்ளது என புராணங்கள் கூறுகின்றது. அனைவருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மை இடம் பெற்றது துளசி செடிதான்.

இந்த துளசி செடியை எங்கு வளர்கின்றதோ அந்த இடத்தில் மும்மூர்த்திகளும், சகல தேவதைகளும் வாசம் செய்கின்றார்கள் என்று அர்த்தம். சூரியனை கண்டதும் எவ்வாறு இருள் மறைகின்றதோ அதுபோல துளசி காற்று பட்டாலே பாவங்களும் நோய்களும் நம்மிடமிருந்து விலகிச் செல்லும்.

துளசி இலையை தெய்வப்பிரசாதமாக உண்பவர்களுக்கு சகல பாவங்களும் மறைந்துவிடும். எந்த வீட்டில் துளசி செடிகள் நிறைய இருக்கின்றதோ அந்த இடம் புண்ணிய திருத்தலமாக கருதப்படுகிறது. அந்த இடத்தில் அகால மரணம், வியாதி போன்றவைகள் ஏற்படாது.

துளசி செடிகளை திருமாலின் அம்சமாக மதித்து பூஜை செய்து வருகின்றனர். துளசித்தலத்தால் திருமாலை அர்ச்சனை செய்து பூஜை செய்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது. மேலும் துளசியை பூஜை செய்ததனின் பயனாக சீதைக்கு ராமபிரான் கணவராக கிடைத்தார் என்று ராமாயணம் கூறுகிறது.

மேலும் துளசிச் செடியில் ஏராளமான மருத்துவ பயனும், ஆன்மீகமும் நிறைந்த காணப்படுகின்றது அதனால் அனைவருடைய வீட்டிலும் துளசி செடி என்பது கட்டாயம் வளர்க்க வேண்டும்.