மக்களால் பெரிதலமும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது வருகிற டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான சாத்தியமான வரி உயர்வுகள் மற்றும் சில தினசரி பயன்பாட்டு பொருட்களுக்கு நிவாரணம் உட்பட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மற்றும் முடிவுகளை இந்தக் கூட்டத்தின் மூலம் மாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகையிலை பொருட்களின் தயாரிப்புகள் மீதான வரிகளை அரசாங்கம் முன்பு அதிகரித்துள்ளது, இப்போது, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான GST பகுத்தறிவு குறித்த அமைச்சர்கள் குழு (GoM) வரி விகிதத்தை 28% லிருந்து 35% ஆக உயர்த்த பரிந்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் நடைமுறையில் உள்ள நான்கடுக்கு ஜிஎஸ்டி கட்டமைப்புகளை தக்க வைப்பதுடன் மேலும் மற்றொரு புதிய கட்டமைப்பான 35% ஸ்லாப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் வருவாய் ஈட்டுதலை அதிகரிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கவுன்சில் பல்வேறு பொருட்களுக்கான கட்டண மாற்றங்களையும் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பொருட்களுக்கு எல்லாம் கட்டண உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் பொருட்கள் பின்வருமாறு :-
✓ பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் (20லி மற்றும் அதற்கு மேல்) 18% முதல் 5% வரை GST குறைப்பு இருக்கலாம்.
✓ சைக்கிள்கள் (₹10,000க்குள்) ஜிஎஸ்டி 12% முதல் 5% வரை குறையலாம்.
✓ குறிப்பேடுகள் 12% முதல் 5% வரை குறைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
✓ காலணிகள் (ஒரு ஜோடிக்கு ₹15,000க்கு மேல்) ஜிஎஸ்டி 18% முதல் 28% வரை அதிகரிக்கலாம்.
✓ கை கடிகாரங்கள் (₹25,000க்கு மேல்) 18% முதல் 28% வரை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு :-
டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் கவுன்சில் கூட்டத்தின் பிறகுதான் எந்தெந்த பொருட்களின் ஜிஎஸ்டி வரையானது உயரும் மற்றும் குறையும் என்பது சரிவரத் தெரியும்.