அக். 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்! கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்…. மத்திய அரசு வெளியீடு!

0
200

திரையரங்குகளை வரும் 15ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதியளித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், நாடு முழுவதும் வரும் 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதியளித்திருந்தது.

இந்நிலையில், திரையரங்குகளை திறக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

திரையரங்குகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்:

  • 50 சதவிகித இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம்.
  • ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமரவைக்க செய்ய வேண்டும்.
  • திரையரங்கிற்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
  • பார்வையாளர்கள் திரையரங்கிற்குள் செல்லும் போது சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.
  • திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும்.
  • திரைப்படம் துவங்கும் முன்பும், இடைவேளையின் போதும் கொரோனா விழிப்புணர்வு குறும்படங்களை திரையிட வேண்டும்.
  • கூட்டத்தை தடுக்க டிக்கெட் விற்பனை கவுண்டர்கள் நாள் முழுவதும் திறந்து வைக்க வேண்டும்.
  • இடைவேளையின் போது பார்வையாளர்கள் இருக்கைகளை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • திரையரங்குகளில் 24 முதல் 30 டிகிரியில் ஏ.சி. அளவை பராமரிக்க வேண்டும்.
  • ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்ய பார்வையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
  • திரையரங்கிற்குள் பாக்கெட்களில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்கு தீனிக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.
  • ஒவ்வொரு காட்சிக்கு பிறகும், திரையரங்கு முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
  • கொரோனா அறிகுறி இருந்தால் திரையரங்கிற்குள் அனுமதிக்க கூடாது.
Previous articleதனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி!
Next article2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணி புரிவது கட்டாயம்..! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here