ஆண்களே இது உங்களுக்கானது! முகத்தை பளபளப்பாக ஒரு சூப்பர் டிப்ஸ்!

0
238

ஆண்களே இது உங்களுக்கானது! முகத்தை பளபளப்பாக ஒரு சூப்பர் டிப்ஸ்!

பெண்களுக்கு மட்டும்தான் முகப்பரு, சரும பாதிப்பு உள்ளது என அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இது போன்ற பிரச்சனைகள் ஆண்களுக்கும் இறக்கத்தான் செய்கின்றது. அதனை சரி செய்ய ஒரு எளிய வழிமுறை. முதலில் ஒரு கேரட்டை தோல் நீக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சிறிய அளவு தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் 100 மில்லி பால் சேர்த்து கொள்ளலாம்.

இதனை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை முகத்தில் ஐந்து நிமிடம் தொடர்ந்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு கற்றாழை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனின் தோலை நீக்கிவிட்டு முகத்தில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனை கழுவாமல் காலையில் எழுந்து முகத்தை கழுவ வேண்டும். நிச்சயமாக உங்கள் முகத்தில் நல்ல ரிசல்டை நீங்கள் பார்க்கலாம். மீதமுள்ள அரைத்து வைத்திருந்த கேரட் மற்றும் தக்காளி பால் சேர்த்த கலவையை ஐஸ் கியூபில் வைத்து ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்து தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Previous articleவிந்தணுக்களை அதிகரிக்கும் கேரட்!! டெய்லி இதை இப்படி சாப்பிடுங்கள்!
Next articleநீங்கள் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கடவுள் இவர்கள் ரூபத்தில் கூட உங்களிடம் வருவார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here