அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஜி.வி.பிரகாஷின் திரைப்படங்கள் – லேட்டஸ்ட் அப்டேட்!!

Photo of author

By Hasini

அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஜி.வி.பிரகாஷின் திரைப்படங்கள் – லேட்டஸ்ட் அப்டேட்!!

Hasini

Updated on:

அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஜி.வி.பிரகாஷின் திரைப்படங்கள் – லேட்டஸ்ட் அப்டேட்!!

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் பல்வேறு பாடல்கள் செம ஹிட் அடித்துள்ளது. முதலில் இசையமைப்பாளராக திரைப்படவுலகில் அறிமுகமான இவர், 2015ம் ஆண்டு ‘டார்லிங்’ என்னும் த்ரில்லிங் திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, த்ரிஷா இல்லனா நயன்தாரா, நாச்சியார், சிவப்பு மஞ்சள் பச்சை, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பு மற்றும் இசை திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தினை பிடித்துள்ளார்.

இந்நிலையில், வரும் 22ம் தேதி இவரது நடிப்பில் உருவான ‘ரெபெல்’ என்னும் திரைப்படம் வெளியாகவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிகேஷ் இயக்கியுள்ள இப்படம் அரசியல், ஆக்க்ஷன் சண்டை காட்சிகளை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் தமிழுக்காக போராடும் இளைஞனாக நடித்துள்ளார் என்று கூறப்டுகிறது.

இதனையடுத்து, பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கள்வன்’. இதில் பாரதி ராஜா, ஜி.வி.பிரகாஷ், இவானா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டில்லி பாபு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். இதனிடையே இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வெளியாகவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்போது ஜி.வி.பிரகாஷ் தனது 25வது திரைப்படமான ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.