இது தான் அடங்கமறு அத்துமீறு என்பதா? திருமாவளவனை வம்பிழுத்த ஹச் ராஜா

0
263

இது தான் அடங்கமறு அத்துமீறு என்பதா? திருமாவளவனை வம்பிழுத்த ஹச் ராஜா

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடிக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.இந்த போராட்டத்தை எதிர்த்தும் ஆதரித்தும் தங்களுடைய கருத்துகளை பலர் வெளியிட்டுக் கொண்டே வருகிறார்கள்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக எம்பியும் விசிக கட்சியின் தலைவருமான திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்பி இருவரும் விவசாயிகள் போராட்டம் நடத்தும் டெல்லிக்கே சென்றனர்.விவசாயிகளை பார்க்க செல்லும் முன்பே பாராளுமன்றத்தில் விவசாயிகளின் குரலாக வேளாண் சட்டத்திற்கு எதிர்த்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமாவளவன் டெல்லிக்கு சென்றதை அடுத்து ட்விட்டரில் விசிக கட்சியின் தொண்டர்கள் ட்விட்டரில் #thiruma_with_farmer என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் டெல்லிக்கு சென்ற போது ரயிலில் சென்ற திருமாவளவன் பெண்களுக்காக இருந்த இருக்கையில் அமர்ந்துள்ளது போன்று ஒரு புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்தை சுட்டி காட்டி பெண்களுக்கான இருக்கையில் போய் அமர்ந்து உள்ளீர்களே இதுதான் உங்க அடங்கமறு அத்துமீறு என்பதா என்று கிண்டலாக பாஜகவின் ஹச். ராஜா அவர்கள் ட்விட் செய்துள்ளார்.

ஹச். ராஜாவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு விசிக கட்சியின் தொண்டர்கள்‌ பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

 

 

Previous articleகுடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
Next articleஆசிட் வீசுவதாக 10-ம் வகுப்பு மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கார் ஓட்டுனர்:! அதிரவைக்கும் காரணம்!!