தமிழகத்தை பொறுத்தவரையில் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து வரும் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.அதோடு மற்ற மாநிலங்களில் எல்லாம் எட்டு கட்டம், 9 கட்டமாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது இதற்குக் காரணம் தமிழகத்தில் நிலவும் அமைதியான சூழல் தான் என்று சொல்கிறார்கள்.
ஆனால் மற்ற மாநிலங்களில், தேர்தல் என்று வந்துவிட்டால் அராஜகங்கள் மற்றும் கலவரங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அதன் காரணமாகவே ஒரு சில மாநிலங்களில் பல்வேறு கட்டமாக தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் மத்திய அரசும் சரி, தேர்தல் ஆணையமும் சரி ,தமிழகத்தை மெச்சுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் காரைக்குடி சட்டசபைத் தொகுதியில் வேட்பாளருமான எச் ராஜா காரைக்குடியில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இருந்தாலும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கமல்ஹாசன் மற்றும் திமுகவை சேர்ந்தவர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியாத தொந்தரவாக இருந்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
வாக்குப்பதிவு இயந்திரத்தை யாராலும் ஹேக் செய்ய இயலாது ஆகவே இதில் எந்த ஒரு குளறுபடியும் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை அப்படியான செயல்கள் இதில் செய்ய இயலாது என்பதை நிரூபிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தும் தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் முன்வரவில்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்பது ஒரு கால்குலேட்டர் போன்றதுதான். இணையதளம் தொடர்பான இணைப்பு எதுவும் அதில் கிடையாது, தேங்காய்நார் கன்டைனர் மற்றும் டாய்லெட் கண்டெய்னர் போன்றவைகள் வந்ததை பார்த்துவிட்டு மிரண்டு போய் இருக்கிறது இந்த பெரியாரிச கூட்டம் என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது. நாங்கள் 10 இடங்களில் வெற்றி பெற்று இருக்க மாட்டோமா திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 3 இலக்கத்தை தடுத்து அந்த பயத்தில் தான் காவல் துறையை சார்ந்த பெண்ணின் கைப்பையை கூட திறந்து பார்க்கிறார்கள் .முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு ஸ்டாலினுக்கு கிடையாது, திமுக வெற்றி பெறப்போவதில்லை திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.