தேர்தலுக்காக திமுகவினர் போட்ட நாடகம்! அம்பலப்படுத்திய ஹச் ராஜா

Photo of author

By Anand

திமுகவின் மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி விமான நிலையத்திற்கு வந்திருந்த போது அங்கு சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி (CISF) சோதனை மற்றும் பாதுகாப்பு பற்றி கனிமொழியிடம் இந்தியில் கேட்டபோது தனக்கு இந்தி தெரியாது தமிழ் மற்றும் ஆங்கிலம் தான் தெரியும், அதனால் எதுவாக இருப்பினும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கூறுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த CISF அதிகாரி நீங்கள் இந்தியர் தானா? என்று பதிலுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவு செய்த கனிமொழி எம்பி இந்தி தெரிந்தால் தான் இந்தியரா? என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இதனையடுத்து திமுகவின் எம்பி கனிமொழி மற்றும் அவருக்கு ஆதரவாக திமுகவின் கூட்டணி கட்சியினர் பெரும்பாலோனோர் இந்தி தெரிந்தால் தான் இந்தியரா? என மத்திய அரசை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா உள்ளிட்டோர் கனிமொழி மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியினருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹச். ராஜா இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,

நான் கடந்த பல வருடங்களாக அருணாச்சல், நாகாலாந்து மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர இந்தியாவின் மற்ற பெரும்பாலான மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளேன் ஆனால் கனிமொழி அவர்களுக்கு நேர்ந்தது போல் எனக்கு எங்கும் நேர்ந்ததில்லை. இது முழுக்க திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தலுக்காக மொழியை அரசியலாகும் வேலையாகும்,ஆனால் அவர்களின் இந்த முயற்சி நிச்சயம் தோல்வியை தழுவும் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக கோரோனா பாதிப்பு உள்ளிட்ட பல விவகாரங்களை அரசியலாக்கி வரும் திமுக தற்போது மொழியை வைத்து அரசியல் செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளது பொது மக்களை சிந்திக்க வைத்துள்ளது.