3 மாசம்தான் இருக்கு… முடிக்க முடியுமா?… குழப்பத்தில் ஹெச் வினோத்!

0
198

3 மாசம்தான் இருக்கு… முடிக்க முடியுமா?… குழப்பத்தில் ஹெச் வினோத்!

ஹெச் வினோத் இயக்கும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படம் திடீர் எண்ட்ரியாக பொங்கல் ரேஸில் இணைந்துள்ளார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு ‘துணிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தில் ஏகப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதால் இன்னும் இருக்கும் குறுகிய காலத்துக்குள் அந்த பணிகளை முடிக்க முடியுமா என்ற குழப்பத்தில் இயக்குனர் ஹெச் வினோத் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீரென்று கடைசி நேரத்தில் படம் தள்ளிபோகுமோ என்று சந்தேகங்களும் எழுந்துள்ளன.

இதற்கிடையில் அஜித்தைப் பற்றி சமீபகாலமாக மற்றொரு தகவலும் பரவி வருகிறது. அஜித், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை முடித்துவிட்டு அஜித் அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு எந்த படத்திலும் நடிக்க போவதில்லையாம். ஏனென்றால் அஜித் சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் பல நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாராம்.

Previous articleமீண்டும் இணையும் ராமராஜன் – இளையராஜா கூட்டணி… ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Next articleவிதிகளை மீறி பந்தில் எச்சிலைத் தடவிய பாகிஸ்தான் வீரர்… கிளம்பிய சர்ச்சை!