இப்படியும் திருடலாமா வீடியோ கலைஞர்களை மிரட்டும் ஹேக்கர்களா??

Photo of author

By Parthipan K

இப்படியும் திருடலாமா வீடியோ கலைஞர்களை மிரட்டும் ஹேக்கர்களா??

 

கம்ப்யூட்டர்களில் ஊடுருவி வைரஸை பரப்பி பணம் பறிக்கும் ஹேக்கர்களால் ஸ்டுடியோ தொழில் செய்பவர்கள் பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் திருமணங்கள் சுப நிகழ்ச்சிகளை அதி நவீன கேமராக்கள் கொண்டு பதிவு செய்யும் தொழில்நுட்ப கலைஞர்கள் அவற்றை திரைப்பட காட்சிகள் போன்ற ஸ்பெஷல் எபெக்ட்டுகளை சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு தருகிறார்கள்.

வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த புதிய மென்பொருட்கள் விசுவல் எபெக்ட் வினை மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யும் ஸ்டுடியோ தொழில்நுட்ப கலைஞர்கள் அண்மை காலமாக புதுவிதமான மிரட்டலை எதிர் கடலூரில் இதுபோல ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.இலவசமாக கிடைக்கும் சில எஃபெக்ட் களை பதிவிறக்கம் செய்யும்போது ரான்சம் வேர் வைரஸ்களை கம்ப்யூட்டருக்குள் புகுத்தி அதில் உள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஹேக்கர்கள் முடக்குவது ஸ்டூடியோ தொழில்நுட்ப கலைஞர்களை அதிர வைக்கிறது.

காவல்துறையிடம் புகார் அளித்தாலும் இது போன்ற ஹேக்கர்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு தொழில்நுட்பங்கள் இல்லை என்பது ஒரு பின்னடைவாகவே இருக்கிறது கம்ப்யூட்டர் ஆண்ட்ராய்டு போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பற்ற இணைய பக்கங்களுக்கு செல்லும்போது ஆசையை தூண்டி பதிவிறக்கம் செய்ய வைத்து உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் மிரட்ட தொடங்கி விடுவார்கள் ஹேக்கர்கள் என்பதால் ஜாக்கிரதை என எச்சரிக்கிறது இன்றைய விஞ்ஞான உலகம்.