கட்சியிலிருந்து கே.டி ராகவன் ராஜினாமாவா? பா.ஜ.கவில் பரபரப்பு!

0
153
Had KT raghavan resigned post from bjp
Had KT raghavan resigned post from bjp

கட்சியிலிருந்து கே.டி ராகவன் ராஜினாமாவா? பா.ஜ.கவில் பரபரப்பு!

தமிழகத்தின் பா.ஜ.க. நிர்வாகி கே.டி ராகவன் இன்று கட்சிப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.தமிழக பா.ஜ.கவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் கே.டி.ராகவன்.இவர் சென்னையை அடுத்த செங்கல்பட்டைச் சேர்ந்தவர்.இவர் சில ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார்.மேலும் தமிழக பா.ஜ.கவின் பொதுச்செயலாளர் ஆகவும் அவர் உள்ளார்.வழக்கறிஞர் ஆகவும் செயல்படுகிறார் இவர்.

இந்நிலையில் இன்று காலை சமூக வலைத்தளங்களில் இவரைப் பற்றிய வீடியோ ஒன்று வெளியானது.இவரின் இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.இந்த வீடியோவின் காரணத்தால் அவர் தன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்கிறார் என்று அவரே கூறியுள்ளார்.மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ராஜினாமா குறித்த விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

அவரின் ட்வீட்டில் தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்.நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்.இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இன்று மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன்.நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன்.தர்மம் வெல்லும் என அவர் பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த ராஜினாமாவானது பா.ஜ.க கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இவர் இனிமேல் கட்சிப்பணிகளை செய்வாரா மாட்டாரா என தெரியவில்லை.இதனால் தற்போது தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் பதவி காலியாக இருக்கிறது.கே.டி.ராகவன் தொலைக்காட்சி விவாதங்களிலும் பா.ஜ.க சார்பில் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமத்திய அமைச்சர் முதல்வரை விமர்சனம் செய்ததால் ஏற்பட்ட விபரீதம்! பாஜகவின் அடுத்தகட்ட ரவுடிசம்!
Next articleவன்னியர் இட ஒதுக்கீடு இடைக்கால தடை விதிப்பு? நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் உயர் நீதிமன்றம்!