அழகான அடர்த்தியான கூந்தல் வளர்ச்சியை யார் தான் விரும்ப மாட்டார்கள்.இதற்காக கண்ட கெமிக்கல் பொருட்களை தலைக்கு பயன்படுத்தாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:
1)கருஞ்சீரம் ஒரு தேக்கரண்டி
2)தேங்காய் எண்ணெய் 200 மில்லி
3)வெந்தயம் ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
அடுப்பில் இரும்பு கடாய் ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி கருஞ்சீரம் போட்டு நன்கு வறுக்க வேண்டும்.பிறகு இதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.
அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.இந்த இரண்டு பொருட்களையும் நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் கொட்டி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் அதே இரும்பு கடாய் வைத்து 200 மில்லி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் அரைத்த கருஞ்சீரகம் மற்றும் வெந்தயப் பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.இந்த எண்ணெயை தினமும் தலைக்கு அப்ளை செய்து வந்தால் தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.
தேவையான பொருட்கள்:
1)தேங்காய் எண்ணெய் 250 மில்லி
2)ஆளிவிதை ஒரு தேக்கரண்டி
3)நெல்லிக்காய் வற்றல் தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி ஆளி விதை போட்டு லேசாக வறுக்கவும்.பிறகு இதை ஆறவிட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பில் இரும்பு வாணலி வைத்து 250 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அரைத்த ஆளிவிதை,சிறிதளவு நெல்லிக்காய் வற்றல் ஆகியவற்றை தேங்காய் எண்ணையில் போட்டு கொதிக்க வைக்கவும்.
இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.தினமும் இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடியின் அடர்த்தி அதிகமாவதோடு அடர் கருமையாகவும் தெரியும்.