முடி அடர்த்தியாக வளர! வெந்தய பொடி!

Photo of author

By Parthipan K

முடி அடர்த்தியாக வளர! வெந்தய பொடி!

நரைமுடியை கருமையாக்குவதும் மற்றும் முடி கொட்டுவதையும் தடுக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

தற்போது உள்ள சூழலில் மாறிவரும் வாழ்க்கை முறையில் காரணமாக நம் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று முடி கொட்டுதல், நரை முடி போன்றவை ஏற்படுகிறது. இதனை எவ்வாறு தடுக்கலாம் அதன் வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

முடி உதிர்வதை தடுக்கவும், நரை முடியை கருமையாக்கவும் தேவையான அனைத்து பண்புகளையும் வெந்தயத்தில் நிறைந்துள்ளது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, பொட்டாசியம் சத்துக்கள் போன்றவை அதிகப்படியாக நிறைந்துள்ளது.

இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை மிதமான சூட்டில் வறுத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்த்து வருவதன் காரணம் நரை முடியை கருமையாக்க உதவுகிறது. தலைமுடி உதிர்வதையும் தடுக்க உதவுகிறது. கருஞ்சீரகம் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் தலைப்பகுதியில் உள்ள வேர்களின் வறட்சியை தடுத்து முடி உதிர்வதை தடுத்து கடுமையான முடியை அளிக்கிறது.