முடி உதிர்வு பிரச்சனை கட்டாயம் 2 நாளில் நின்றுவிடும்.. வெந்தயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

முடி உதிர்வு பிரச்சனை கட்டாயம் 2 நாளில் நின்றுவிடும்.. வெந்தயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

இன்று முடி கொட்டல் பிரச்சனை என்பது அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.ஹெர்பல் என்ற பெயரில் சந்தையில் விற்கப்படும் அனைத்து வித எண்ணெய்களை பயன்படுத்தியும் முடி உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு எட்டவில்லை என்று நொந்து போனவர்கள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் விரல் விட்டு எண்ணும் தினங்களில் தீர்வு கிடைத்துவிடும்.

1)வெந்தயம்
2)வெங்காயம்

இவ்விரு பொருட்களும் நம் வீட்டில் இருக்கக் கூடியவை தான்.ஒரு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொள்ளவும்.ஒரு கிண்ணத்தில் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊறவிடவும்.

மறுநாள் பார்க்கும் பொழுது வெந்தயம் நன்கு ஊறி வந்திருக்கும்.இந்த வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு ஊறவைத்த நீரை சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு சின்ன வெங்காயத்தை அத்துடன் சேர்த்து ஒருமுறை அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து சீகைக்காய்,அரப்பு போன்ற ஏதேனும் ஒரு இயற்கை பொடி பயன்படுத்தி தலைக்கு குளித்தால் முடி உதிர்தல் நின்று அதன் அடர்த்தி அதிகமாகும்.

1)வெந்தயம்
2)கற்றாழை ஜெல்

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு கற்றாழை துண்டில் இருந்து ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வெந்தய பேஸ்ட்டில் கலந்து தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகமாகும்.