7 நாளில் முடி உதிர்வு நின்று விடும்!! உடனே இதனை ட்ரை பண்ணுங்க!!

0
292
#image_title

7 நாளில் முடி உதிர்வு நின்று விடும்!! உடனே இதனை ட்ரை பண்ணுங்க!!

நம்மில் பலருக்கு இருக்க கூடிய பல பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனை தலைமுடி பிரச்சனை தான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது வேறுபடும். ஆண்களுக்கு முடி கொட்டுவது பிரச்சனையாக இருக்கும்.

பெண்களுக்கு முடி வளராமல் அடர்த்தி இல்லாமல் இருப்பது பிரச்சனையாக இருக்கும். அந்த பிரச்சனைக்கான ஒரு அற்புதமான தீர்வை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொடுகுத் தொல்லை, முடி வேர்கள் பலவீனமாக இருத்தல், இதை யெல்லாம் சரி செய்ய இந்த பதிவில் கூறியிருக்கும் மருந்தை செய்து இரவு தூங்கச் செல்லும் முன்பு செய்து படுத்தால் போதும். தலைமுடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

தேவையான பொருட்கள்

* தேங்காய் எண்ணெய்

* கற்றாழை( ஜெல் இல்லாமல்)

* கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் ஒரு சிறய பாத்திரத்தை எடுத்து அதில் செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெய் சிறிதளவு ஊற்ற வேண்டும். பிறகு ஜெல் இல்லாமல் எடுத்து வைத்துள்ள கற்றாழையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அதை தேங்காய் எண்ணெயில் சேர்க்க வேண்டும்.

பிறகு கறிவேப்பிலையையும் அந்த எண்ணெயில் சேர்க்க வேண்டும். இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வரை கொதித்த பிறகு இறக்கி வைக்க வேண்டும். இந்த எண்ணெய் முழுவதுமாக ஆறிய பின்னர் தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு இரண்டு ஸ்பூன் எண்ணெய் எடுத்து முடி வேர்கால் முதல் நுனி முடி வரை நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.

பிறகு சிறிது நேரம் கழித்து முடியை சீவி ஜடை போட்டுக்க வேண்டும். மறுநாள் காலையில் கெமிக்கல் இல்லாத ஷாம்பு அல்லது சீவக்காய் போட்டு தலையை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் தலைமுடி நன்றாக நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்

Previous articleநகங்களில் இந்த அறிகுறியா.. கட்டாயம் இந்த நோய் தான்!! மக்களே எச்சரிக்கை!!
Next articleஇழந்த ஆண்மையை மீட்டு கொண்டு வரும் அற்புத செடி!! ஆண்களே இதனை கண்டால் விட்டு விடாதீர்கள்!!