ஒரு சிலருக்கு தலை குளித்தபின்பு முடி வறட்சியாக காணப்படும். அதுவும் சுருட்டை முடி உள்ளவர்களுக்கு தலைக்கு குளித்து விட்டால் மிகவும் வறட்சியாக சுருண்டு காணப்படும். இப்பொழுது வறட்சியை நீக்கி பளபளப்பாக மென்மையாக ஆக்குவதற்கு இயற்கை சீரம் தயாரிப்பது எப்படி என்று பார்க்க போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
1. அரிசி கழுவிய தண்ணீர்
2. இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில்
3. ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்
செய்முறை:
1. ஒரு கப் அரிசியை எடுத்து ஒரு அலசு அலசி விட்டு பிறகு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு பவுல் எடுத்து கொள்ளவும்.
3. அதில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ளவும்.
4. பின் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
5. இப்பொழுது அரிசி கழுவிய தண்ணீர் 4 அல்லது 5 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
6. இது ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
தலைக்கு குளித்தபின் தலைமுடி நன்கு காய்ந்த பின் இந்த தண்ணீரை ஸ்பிரே செய்து பின் காய வைக்கவும்.
இப்படி செய்யும் பொழுது உங்களது தலைமுடி மிகவும் கருமையாகவும் பளபளப்பாகவும் மின்னும் அழகை பெறும்.