இந்தியன் ரிசர்வ் வங்கியானது ரெப்கோ வட்டி விகிதத்தை மீண்டும் குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி ரெப்கோ வட்டி விகிதம் குறையும் பட்சத்தில் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கும் முக்கியமாக வீட்டு கடன் பெற்றவர்களுக்கும் இது மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்கோ வட்டி விகிதமானது இதுவரை இந்தியன் ரிசர்வ் வங்கியால் 11 முறை குறைக்கப்பட்டுள்ளது. இதன் கடைசி பகுதியாக 2019 பிப்ரவரி மாதம் 6.50% இருந்த ரெப்கோ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 6.25% ஆக அறிவிக்கப்பட்டது. இது EMI போட்டுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக மாறியது. அதாவது வீட்டு கடன் பெற்றவர்களுக்கு இது மிகப்பெரிய நற்செய்தியாக மாறியது.
காரணம், இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது ரெப்கோ வட்டி விகிதத்தை குறைத்த உடன் பல வங்கிகள் தங்களுடைய வங்கி கடன்களின் வட்டி விகிதங்களை குறைத்தது. இந்த மிகப்பெரிய மாற்றம் நடுத்தர மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியான செய்தியாக மாறியது. அதனை தொடர்ந்து மீண்டும் ரிசர்வ் வங்கி ஆனது ரெப்கோ வட்டி விகிதத்தை குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தற்பொழுது வெளியாக இருக்கிற தகவலின்படி, 6.25% ஆக இருக்கக்கூடிய ரெப்கோ வட்டி விகிதமானது மீண்டும் 0.25% குறைக்கப்பட்டு 6% மாற்றப்பட அதிக அளவு வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறைப்பதன் மூலம் மேல்கூறியவாறு வங்கி கடன் பெற்றவர்கள் வீட்டு கடன் பெற்றவர்களுக்கு இது மிகப்பெரிய நற்செய்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.