இசை இளவரசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிக்கவிடும் ரசிகர்கள்!

இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவிற்கு திரை துறையினரும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இவர் தனது இசை பயணத்தை 1997 ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் தொடங்கினார். இசைஞானி இளையராஜாவின் மகனாக இருந்தாலும் தன்னுடைய முயற்சியினாலேயே கடந்த 23 ஆண்டுகளாக சினிமாவில் இசைக்கென பெயர் போனவர்  யுவன் சங்கர் ராஜா.இசை இளவரசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிக்கவிடும் ரசிகர்கள்!இவர் இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் என உறுதி பூண்ட பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் உண்டு. உண்டு அந்த அளவிற்கு காதல், கொண்டாட்டம், சோகம், காதல் தோல்வி போன்ற பல்வேறு விதமான உணர்ச்சிகளின் கலவைகளை பாடல்களின் மூலம் வெளிக்கொணரும் திறமைசாலி ஆவார்.

இதுவரை 150க்கு மேற்பட்ட படங்களில் இசை அமைத்த பெருமைக்குரியவர்.இசை அமைப்பது மட்டுமல்லாமல் தனது தனித்துவமான குரல் வளத்தின் மூலம் பல பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார். 

Leave a Comment