தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? – முக்கியமான அறிவிப்பு!

0
54

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? – முக்கியமான அறிவிப்பு!

தமிழகத்தில் 30ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட ஊரடங்கு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது.

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் இயங்க 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளித்துள்ளது.

வணிக வளாகங்கள், பெரிய கடைகள், தொழிற்சாலைகளில்  100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என அனுமதி வழங்கியுள்ளது.

ஊர்வலங்கள் மற்றும் திரையரங்குகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐடி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என அனுமதி வழங்கியுள்ளது.

அதேபோல் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரு சில கட்டுப்பாடுகளுடன் மாவட்டங்களுக்கு உள்ளே போக்குவரத்து தொடரும் என கூறியுள்ளது. தனிமனித இடைவெளி மற்றும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சானிடைசர் வழங்கப்படும் எனவும் தினமும் கொரோனா பரிசோதனை போக்குவரத்து ஊழியர்களுக்கு செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.

 

author avatar
Kowsalya