விளையாட்டு வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! அமைச்சரான உதயநிதியின் அடுத்தடுத்த அதிரடி!!

0
147
Happy news for athletes! Minister Udayanidhi's next action!!
Happy news for athletes! Minister Udayanidhi's next action!!

விளையாட்டு வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! அமைச்சரான உதயநிதியின் அடுத்தடுத்த அதிரடி!!

அனைத்து தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அறிவித்தார்.

கடந்த 14-ந் தேதி உதயநிதி அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறைஅமைச்சராக பொறுப்பேற்றார்.அமைச்சரானதும் முதல் நிகழ்ச்சியாக நேரு உள் விளையாட்டு அரங்கில், ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் கலந்துக் கொள்ளும் மாணவர்களை சந்தித்து உரையாடினார். இந்த போட்டிகள் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்க இருக்கிறது.இதில் தமிழ்நாடு சார்பில் 177 மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

அவர்களை சந்தித்த உதயநிதி அவர்களுக்கு தேவையான முதலுதவி உபகரணங்களை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது பேசிய உதயநிதி தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுப்பதே எனது முதல் இலக்காக கொண்டு செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதலோடு எனது பணிகளை சிறப்பாக செய்ய முயற்சி செய்வதாகவும் உதயநிதி கூறினார்.

முதல்வர் தங்க கோப்பை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதில் கபடி,சிலம்பம் போன்ற பாரம்பரியமான விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளித்து தங்க கோப்பைக்கான போட்டிகள் ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளன.அதற்க்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்குவது  குறித்த கோரிக்கை  முதல் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்து பீச் ஒலிம்பிக்ஸ் போட்டியை தமிழ்நாட்டில் நடத்துவதற்க்கான முயற்சிகளை செய்து வருகிறோம். விளையாட்டு சங்கங்கள் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.அவர்களுடன் நாங்களும் ஒருங்கிணைந்து விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டுக்கு பாடுபடுவோம்.மேலும் ஏடிபி டென்னிஸ் போட்டிகளையும் தமிழ்நாட்டில் நடத்த தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் மாணவர்களிடம் பேசிய உதயநிதி அவர்கள் கேட்ட கோரிக்கைகளை முதல் அமைச்சர், துறை அமைச்சர், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று  கண்டிப்பாக நிறைவேற்றுவதாக தெரிவித்தார். மேலும் ஜம்மு காஷ்மீரில் நடந்த 33-வது டென்னிஸ் கிரிக்கெட் போட்டியில் 2-வது இடம் பெற்ற மாணவிகள் உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சேகர்பாபு,கயல்விழி செல்வராஜ் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா,விளையாட்டு மேம்பாட்டு துறை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கே.பி.கார்த்திகேயன் ஆகியோர் உடன் கலந்துக் கொண்டனர்.

Previous article2023-ல் நீட் நுழைவுத்தேர்வு அட்டவணை!! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!
Next articleசோனு சூட் க்கு தக் லைஃப் கொடுத்த காப்பிய! இணையத்தில் வைரலாகும்  வீடியோ!