அரசு பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த முறையில் தான் நீங்கள் செயல்பட வேண்டும்!
தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கூறினார்கள்.எதிர்பார்தப்படியே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை தொடர்ந்து பெண்களுக்கு கட்டணமில்லாத பயண சீட்டு வழங்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது.அதனால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைபதற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் தற்போது அரசு பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றும் திட்டத்தில் எச்டிஎப்சி வங்கியும் இணைந்துள்ளது.இதில் முதல் கட்டமாக ஐந்து அரசு பள்ளிகளை தற்போது ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.இந்து ஐந்து ஸ்மார்ட் பள்ளிகளை தமிழக நிதி அமைச்சர் மற்றும் ஹெச்டிஎப்சி நிர்வாக இயக்குனர் தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடரந்து ஸ்மார்ட் வகுப்பறைகளில் ஸ்மார்ட் இண்டராக்டிவ் பேனல்கள்,மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆய்வகம், புத்தகங்கள் மற்றும் உள்கட்டமைப்புடன் கூடிய நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளது.மேலும் தமிழகம் முழுவதும் 24 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்படவுள்ளது அதன் மூலமாக 22,000 மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.