இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சரிவு!
கடந்த கொரோனா பெருந்தொற்றின் பொழுது மக்கள் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை உச்சம் பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் இம்மாதம் முதலில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
கடந்த வாரங்களாக தங்கம் சற்று குறை தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 5210 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் ஒரு சவரன் 41680 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல ஒரு கிராம் வெள்ளி 70 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 7000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 72 ரூபாய் குறைந்துள்ளது. அதனால் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ 41608 விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் 22 கேரட் ஆபரம் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 9 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5201 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 69 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.