குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

0
242
#image_title

குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ. 1000 உரிமைத்தொகை  ஜூன் 3ஆம் தேதி தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

திமுக அரசு வெற்றி பெற்றதும் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை மகளிர்க்கு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்திருந்தது. இதன்படி திமுக அரசு ஆட்சி அமைத்து இரண்டாவது ஆண்டு ஆகியும் இன்னும் அது பற்றி எந்தவித அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.

இதற்குக் காரணமாக தமிழக அரசிடம் போதுமான நிதி இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலவில்லை. எதிர்க்கட்சிகளும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில் இந்த வாக்குறுதி கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பிரசாரத்துக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று கூறினார்.

இதேபோல் ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூடிய விரைவில் மகளிர்க்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும்? யார் யார் பயனாளிகளாக ஏற்றுக் கொள்ளப்படுவர்? போன்ற கேள்விகள் எழுந்து வந்தது.

இதையடுத்து குடும்பத்தலைவிகளுக்கு  மாதந்தோறும்  வழங்க இருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை  திட்டத்தை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம்தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இந்நிதி வழங்கப்பட மாட்டாது.

பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை நிதித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. பி.எச்.எச். என்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பி.எச்.எச்.ஏ.ஏ.ஒய். என்ற அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் (அதாவது 35 கிலோ அரிசி வாங்குபவர்கள்) ரூ.1,000 கிடைக்கும். 

அதே நேரத்தில் கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறும் கல்லூரி மாணவிகளின் தாய்மார்களுக்கு இந்த திட்டத்தில்.  எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 2023 -24 ஆம் ஆண்டுக்கான மார்ச் மாதம் 9 அல்லது 10-ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் தாக்கலில் இந்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

பின்னர் அமைச்சரவை கூடி ஒப்புதல் வழங்கியதும் இதற்கான விரிவான அரசாணை வெளியிடப்படும். அதில் விதிமுறைகள் அனைத்தும் இடம்பெற்று இருக்கும். உரிமைத்தொகை பெற இருக்கும் குடும்பத் தலைவிகளின் ரேஷன் அட்டையில் எவ்வித மாறுதல்களும்  செய்யப்பட மாட்டாது. தேர்வு செய்யப்பட்ட குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

 

 

Previous articleசூர்யாவின் அடுத்த படம் இதுதானா? இவருடன் தான்  கூட்டணி!
Next articleஉடல்நிலை பாதிப்பு! ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு!