இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடி சரிவு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள்.அதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்து வந்தது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது.
கடந்த தினங்கள் அனைத்தும் பண்டிகை நாட்களாக வந்ததன் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்து தான் வருகின்றது.இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.அந்த அறிவிப்பின் அடிப்படையில் சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை பவுன் ஒன்று 40 ரூபாய் அதிகரித்து விற்பனையானது.ஆனால் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ 12 குறைந்தது.
அதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 5338 ரூபாய்க்கு விற்பனையாகின்றது.மேலும் 22 கேரட் ஆபரண தங்கம் பவுன் ஒன்றுக்கு 96 ரூபாய் குறைந்து ரூ 42,702 க்கு விற்பனையாகின்றது.மேலும் 18 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ 4382 க்கு விற்பனையானது.இன்று காலை நிலவரப்படி ஒரு கிராமிற்கு ரூ 9 குறைந்து ரூ 4373 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் நேற்று மாலை ஒரு கிலோ வெள்ளியின் விலை 74,700 ரூபாய்க்கு விற்பனையானது.ஆனால் இன்று காலை ஒரு கிலோவிற்கு ரூ 200 ரூபாய் குறைந்தது.அதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ 74,500 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.அதனை தொடர்ந்து ஒரு கிராம் வெளி ரூ 74.50 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.