மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் !! தமிழ் புத்தாண்டு ஆஃபர்!!

Photo of author

By CineDesk

மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் !! தமிழ் புத்தாண்டு ஆஃபர்!!

CineDesk

Happy News for Metro Passengers !! Tamil New Year Offer !!

மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் !! தமிழ் புத்தாண்டு ஆஃபர்!!

கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து இரயில் சேவைகளும் நிறுத்தப்பட நிலையில் தற்போது தடைகள்  விளக்கப்படிருந்தலும் அனைத்து இரயில்களும் இயக்கப்படாமல் தான் உள்ளது. எனினும் அனைத்து இடங்களுக்கும் இரயில் போக்குவரத்து நடைபெறுகிறது என்பதுதான் திருப்தி அளிக்கும் விஷயம் ஆகும்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து நிருவாகம்  மெட்ரோ பயணிகளுக்கு சிறப்பு சலுக்கையை அறிவித்துள்ளது. இன்று தெலுங்கு வருட பிறப்பும் நாளை தமிழ் வருட பிறப்பும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மற்றும் நாளை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கு 50 சதவிகித பயண கட்டண சலுகையை அறிவித்துள்ளது.

மேலும் ஞாயிறு அன்று பொது விடுமுறைக்காகவும் சென்னை மெட்ரோ நிருவாகம் 50 சதவிகித கட்டண சலுகையை அறிவித்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டையும் பெருமையையும் மென்மேலும் வளர்க்கும் இந்த தமிழ் ஆண்டின் துவக்கம் நாளை (சித்திரை 1)   கொண்டாடப்படுகிறது. இந்த தமிழ் புத்தாண்டை கொண்டாடும் வகையில் சென்னை மெட்ரோ நிறுவனம் அளித்துள்ள சலுகை மெட்ரோ பயணிகளிடையே மகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.