பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! வார விடுமுறையையொட்டி இந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்!!
இந்த வாரம் தொடர் விடுமுறை வருவதால் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இந்த மாதம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் வரை தொடர்ச்சியாக விடுமுறை வரவுள்ளது. இதன் காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பி உள்ளதால் ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் அதிகரிக்கும்.
இந்த கூட்ட நெரிசலை தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் தாம்பரம்- திருநெல்வேலி- தாம்பரம் இடையே இரண்டு மார்க்கங்களாக சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி வருகின்ற வெள்ளிக்கிழமை 11-ஆம் தேதி தாம்பரத்திலிருந்து சிறப்பு விரைவு ரயில் [06051] மாலை 5 மணி அளவில் புறப்பட்டு மறுநாள் காலை 4:15 மணி அளவில் திருநெல்வேலி சந்திப்பை சென்றடையும்.
அதேபோல மறு மார்க்கமாக [06052] என்ற எண் கொண்ட ரயில் திருநெல்வேலியில் இருந்து சனிக்கிழமை அதாவது 12-ஆம் தேதி மாலை 5:50 மணி அளவில் புறப்பட்டு மறுநாள் காலை 4:10 பத்து மணி அளவில் தாம்பரம் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்களில் இரண்டு முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், 9 படுக்கை வசதி உடைய பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், இணைக்கப்பட்டு இருக்கும். இந்த சிறப்பு ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.