பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமையும் அனைத்து ரேசன் கடை இயங்கும் தமிழக அரசு அதிரடி!!
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் மகளிர்க்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதற்கான திட்ட பணிகள் ஆலோசனை செய்யப்பட்டு அண்ணா பிறந்தநாளில் வழங்குவதற்கு தற்போது விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 24- ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்த முகாம் முதல் கட்டமாக வருகின்ற ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெறுகின்றது.
இந்தப் பணியில் அனைத்து ரேஷன் கடையிலும் பணிபுரியும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணிக்காக தமிழகத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஜூலை 30-ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பணி நாளைக்கு ஈடாக அடுத்த மாதம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாளிலும் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.