பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்து துறையின் சிறப்பு அறிவிப்பு!!

0
152
Happy news for public!! Special Announcement of Transport Department for Diwali Festival!!
Happy news for public!! Special Announcement of Transport Department for Diwali Festival!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்காக போக்குவரத்து துறை சிறப்பு வசதியை செய்து கொடுத்துள்ளது.

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில்     பணி நிமித்தமாக இருக்கும் வெளியூர் பயணிகளுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து எப்போதும் இயக்கப்படும் 4900 சிறப்பு பஸ்களுடன் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து 2910 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை தற்போது முடிவு செய்துள்ளது. இதன்படி வழக்கமான பேருந்துகளுடன் சென்னையிலிருந்து 700 பேருந்துகளும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 330 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த மூன்று நாட்களுக்கு 14 ஆயிரத்து 086 பேருந்துகளை இயக்க போக்குவரத்து சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையிலிருந்து மட்டும் பேருந்து வாயிலாக 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, காரைக்குடி, தூத்துக்குடி, செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திண்டுக்கல், தேனி, பொள்ளாச்சி, திருப்பூர், ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருப்பூர்,திருவனந்தபுரம், காரைக்குடி, எர்ணாகுளம், விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், திருக்கோவிலூர்,, அரியலூர், திட்டக்குடி, செந்துறை, போளூர், வந்தவாசி, ஜெயங்கொண்டம், மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, போன்ற ஊர்களுக்கும், அதே திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், செல்லும் பஸ்கள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம்,தஞ்சாவூர் மார்க்கமாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி, செல்லும் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படும்.

இதுபோல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆரணி, ஆற்காடு, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள், திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள், அதேபோல கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், திருவாரூர், மற்றும் திருத்துறைப்பூண்டி செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அடுத்ததாக மாதாவரம் பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ,மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் பேருந்துகளும் வழக்கம்போல செயல்படும். இதே வழியில் திருச்சி, சேலம், திருவண்ணாமலை, மற்றும் கும்பகோணம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

பொதுமக்கள் ஏதேனும் புகார்கள் மற்றும் இடர்கள் இருந்தால் போக்குவரத்து துறை சார்பில் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

உதவி எண்கள்: 7845700557, 7845727920, 7845740924.

புகார் தெரிவிப்பதற்கான எண்கள்: அரசு பேருந்துகள்: 94450 14436.

ஆம்னி பேருந்துகள்: 044-24749002, 2628

இதற்கிடையில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆகியோர் கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர்கள் கிளாம்பாக்கத்தில் அரசு பஸ்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பஸ்கள் போன்றவை நிறுத்தி வைக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2000 பேர் அமரக்கூடிய இருக்கை, இலவச மருத்துவமனை, ஆம்புலன்ஸ், பாதுகாப்புக்காக காவல் அதிகாரிகள், 3 மடங்கு அதிகமான தூய்மை பணியாளர்கள், ஏடிஎம் இயந்திரங்கள், குடிநீர் வசதி, இலவச ட்ராலிகள், தங்குமிடம் போன்றவை நெரிசல் இல்லாமல் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Previous articleதன்னை உயர்த்திய மக்களை நான் உயர்த்துவேன்!! மாநாட்டில் ரஜினியை மறைமுகமாக சாடிய தவெக விஜய்!!
Next articleபிரபல சீரியல் நடிகை விவாகரத்து!! அதிரும் சின்னத்திரை நட்சத்திரங்கள்!!