சபரிமலை பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த தினத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!

0
148
Happy news for Sabarimala devotees! Special trains will be operated from this day!
Happy news for Sabarimala devotees! Special trains will be operated from this day!

சபரிமலை பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த தினத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த கார்த்திகை மாதத்தில் தான் அதிக அளவு மாலை அணிந்து செல்வார்கள்.

மேலும் ஐயப்பன் கோவிலில் வழிவழியாக பின்பற்றி வரும் வழக்கம் என்றால் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மாலை அணியவோ, கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை.ஆனால் அதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு  உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அப்போது அந்த மனுவை விசாரித்த நீதிபதி பெண்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளித்தனர்.

ஆனால் பக்கதர்கள் அந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.

அதனால் கடந்த புதன் கிழமை மாலை ஆறு மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.நேற்று முதல் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து வருகின்றனர்.அதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து கோவை வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

வரும் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை வாரம் தோறும் புதன்கிழமை அன்று ரயில்கள் இயக்கப்படும். அதனையடுத்து பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை எழும்பூரில் வண்டி எண் 06061 புறப்படும் அதன் பிறகு அந்த ரயில் மறுநாள் காலை 6.15 மணிக்கு கொல்லம் வந்தடையும்.

மீண்டும் மறுமார்க்கத்தில் வண்டி எண்  06062 வரும் 24ஆம் தேதி முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை வியாழக்கிழமை தோறும் கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும்.அதனையடுத்து அந்த ரயில்  மறுநாள் காலை 3.50 மணிக்கு சென்னை வந்தடையும்.

Previous articleதமிழக அரசின் இலவச காசி பயணம்! யாரெல்லாம் இதில் கலந்துக்கொள்ளலாம்? 
Next articleஉடல் நல குறைவால் இறந்த மகன்.. சோகத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு..!