SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! தொடர்ந்து நீடிக்கப்படும் சலுகை!!
இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மேற்கொள்ள UPI யை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.
தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து உள்ளதால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அதிக அளவில் ஆன்லைன் முறையே தேர்வு செய்கின்றனர்.
இவ்வாறு ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு SBI வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.மேலும் SBI நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் ,திடங்களையும் செய்து வருகின்றது.
அந்த வகையில் தற்பொழுது புதிய திட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளது .அதன் படி SBI வாடிக்கையாளர்கள் அனைவரும் புதிய அம்ரித் கலாஷ் டெபாசிட் எஃப்டி என்ற திட்டத்தில் இணையும் பயனாளர்களின் வட்டி வீதம் அதிகரிக்க பட உள்ளதாக கூறப்படுகின்றது.
எனவே SBI வங்கியில் இணையும் பொதுமக்களுக்கு இந்த புதிய திட்டத்தில் 7.10 சதவீதமும் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.60 சதவீதமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த புதிய அம்சம் மற்ற tenors களை விட பயனாளர்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையும் என்று கருதப்படுகின்றது.
இந்த புதிய திட்டம் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது என்று அறிவித்த SBI வங்கி தற்பொழுது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நீடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.