மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த மாவட்டத்தில் இந்த ஒரு கல்லூரிக்கு மட்டும் விடுமுறை!
தமிழகத்தில் தற்பொழுது வடக்கு கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் 16 ஏரிகள் நிரம்பி உள்ளதாக கூறுகின்றனர். மேலும் சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களாக அடையார், சைதாப்பேட்டை பாலம், மெரினா மேலும் வட சென்னை பகுதிகள் காணப்படுகிறது.
இந்த பகுதிகளில் வெள்ளம் அதிக அளவு சூழ்ந்துள்ளது. அங்குள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளது.அங்குள்ள மக்களுக்கு அன்றாட தேவைகளை தமிழக அரசு செய்து வருகிறது.கடந்த மூன்று நாட்களில் மட்டும் சென்னையில் மிகவும் அதிக அளவில் கனத்த மழை பெய்துள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டத்திலும் மழை அதிகளவு பெய்து வருகிறது.அதனால் அம்மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பளித்துள்ளனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு அளித்து கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் எனக் கூறினர். அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதிக மழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் விடுப்பு அளித்துள்ளது. அந்த கல்லூரி மட்டும்,அம்மாணவர்களுக்கு மழை காரணமாக விடுப்பு அளித்துள்ளனர். மாணவர்களுக்கு மட்டும் தான் விடுமுறை அலுவலக பணியாளர்கள் வழக்கம்போல் பணிபுரிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.