மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நள்ளிரவு முதல் விடாது பெய்யும் மழையால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை! 

0
241
#image_title

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நள்ளிரவு முதல் விடாது பெய்யும் மழையால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை! 

 

சென்னை மற்றும் திருவள்ளுவர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடை மழை பெய்து வருகிறது. இதனால் 6  மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன் காரணமாக  சென்னை, மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையுடன் சூறைக்காற்றும் தொடர்ந்து வீசி வருகிறது.

சென்னையில் உள்ள கிண்டி, மீனம்பாக்கம்,  சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், மாம்பலம் சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்பட  பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை விடாமல் வருகிறது.

மழைத்தொடர்ந்து வெளுத்து வாங்கி வருவதால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி கனமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Previous article100% அதிசயம் நிகழும்! அதிக செலவில்லாமல் தொங்கும் தொப்பை குறைய  இதில் ஒன்று போதும்! 
Next articleதுணைத்தேர்வுகள் நடைபெறும்!! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!