மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

0
260
happy-news-for-students-today-is-a-holiday-for-schools-and-colleges-in-this-district
happy-news-for-students-today-is-a-holiday-for-schools-and-colleges-in-this-district

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது பள்ளிகள் ,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோன பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள் இயல்பாக பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.அதனையடுத்து அக்டோபர் மாதம் முழுவதும் பண்டிகை நாட்களாக வருகின்றது.மேலும் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்தது.

இந்நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறுகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை தொடரும் சுழல் நிலவுகிறது.அதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் பெய்து வருகின்றது.அதனை தொடர்ந்து புதுகோட்டை மாவட்டத்தில் இரவு முதல் மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Previous article2.0 படத்தின் வாழ்நாள் சாதனையை பத்தே நாட்களில் முறியடித்த பொன்னியின் செல்வன்!
Next articleஅந்த குடும்பம் இருக்கும் வரையில் அந்த கட்சி இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி!