போக்குவரத்து போலீசாருக்கு ஹாப்பி நியூஸ்! இனி மாதத்தில் இரு முறை.. கமிஷனர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
போக்குவரத்து துறையில் பணியாற்றும் பெருமாள் ஆன அதிகாரிகளுக்கு போக்குவரத்து மாசுபாட்டால் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருப்பதால் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் தனியார் பள்ளி ஒன்றில் இவர்களுக்கு என்று சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் போக்குவரத்து பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரத்த சர்க்கரையின் அளவு, நீரிழிவு, காச நோய், இதய நோய், காது, மூக்கு, தொண்டை, எலும்புகள் முதற்கொண்ட பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். இந்த முகாமில் மாநகர காவல் ஆணையர் மட்டுமின்றி கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இந்த மருத்துவ குழு குறித்து பேசினார். அதில் அனைத்து மண்டலங்களிலும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் சாலைகளின் நின்று அவர்களின் பணிகளை செய்ய வேண்டி உள்ளதால் அங்கு ஏற்படும் காற்று மாசுபாட்டால் பெரும் அவதிக்குள்ளாக கூடும்.
இவ்வாறு தொடர்ந்து மாசுபாடு உள்ள காற்றை சுவாசிப்பதால் போக்குவரத்து பணியில் இருக்கும் ஒருவர் நான்கு அல்லது ஐந்தாண்டு குள்ளேயே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைகிறது. அதனால் இவர்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுவது மிகவும் முக்கியமான ஒன்று.
இவர்களோடு போக்குவரத்து துறையில் உள்ள ஆண் பெண் இருவரின் கணவர் மற்றும் மனைவிமார்களும் சோதனை செய்து கொள்ளலாம் என்று கூறினார். இனிவரும் நாட்களில் மாதத்தில் இரண்டு முறை போக்குவரத்து துறையில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பயன்பெறும் வகையில் இவ்வாறு மருத்துவ முகாம் நடைபெறும் என்றுதெரிவித்தார்.