மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு வெளியிட்ட சலுகை!

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு வெளியிட்ட சலுகை!

துபையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிவிப்பில் துபாயில் மதுபானங்களின் மீது 30 சதவிகிதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.இவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவது வழக்கம் தான். அதனால் அவர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பொதுவாக துபாய் எண்ணெய் எடுப்பதை மட்டும் நம்பியுள்ளது ஆனால் அதற்கு அடுத்ததாக சுற்றுலாவை தான் நம்பி உள்ளது.

மேலும் துபாய் வறட்சியான நிலப்பரப்பைச் சேர்ந்த நாடாக இருந்தாலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அனைத்து கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது.தற்போது சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில்நிறுவனங்களைக் கவரும் வகையில் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது.துபாயில் எந்தவொரு சில்லறை விற்பனை மதுபானக் கடையில் சென்று மதுபானம் வாங்குவதற்கு சிறப்பு அட்டை தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் சட்டத்தில் முஸ்லீம் வகுப்பை தவிர மற்ற வகுப்பினர் சில்லறை விற்பனைக் கடைகளில் மது அருந்த 21 வயதை பூர்த்தி செய்ய வேண்டும்.அதனையடுத்து மதுபானம் வாங்குவதற்கும் அதனை வாகனங்களில் எடுத்துகொண்டு பயணம் செய்வதற்கும் துபாய் காவல் துறையால் வழங்கப்படும் தனிநபர் அட்டையை வைத்திருக்க வேண்டும்.  ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஏழு நாடுகளில் ஷார்ஜா, துபை அருகிலுள்ள நாடுகள் மாதுபானதிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment