#BREAKING:அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த தேதியில் தெரியுமா?

0
100
Holidays for government offices and schools! Do you know what date?
Holidays for government offices and schools! Do you know what date?

#BREAKING:அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த தேதியில் தெரியுமா?

கொரோனா காலகட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அதனால் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெறுகின்றது.

மேலும் பள்ளிகளுக்கு பொது தேர்வுகளும் நடத்தப்பட்து.கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது.அவர்களுக்கு ஒன்பது நாட்கள் நேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி இரண்டாம் தேதி பள்ளி திறக்கபட்டது.

இந்நிலையில் வரும் ஜனவரி ஆறாம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை அன்று ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெறும் அதனால் அதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 28ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலங்களில் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த வாரங்களில் மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்தது அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K