மகிழ்ச்சியான செய்தி! கேஸ் சிலிண்டர் விலை குறைவு! வெளியான அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Divya

மகிழ்ச்சியான செய்தி! கேஸ் சிலிண்டர் விலை குறைவு! வெளியான அதிரடி அறிவிப்பு

மாதத்தின் தொடக்கத்திலேயே வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.92 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை:சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில்,மாதத்தின் முதல் நாளான இன்று எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பின் அடிப்படையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.92 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 1,852 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி 1,994 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இருப்பினும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை.தொடர்ந்து 1,118.50 ஆகவே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவால் உணவகம் வைத்துள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.