இனி குழம்புக்கு சட்னிக்கு தக்காளி கிடையாது… தக்காளி சாஸை பயன்படுத்த வேண்டியது தான்!!

0
28

இனி குழம்புக்கு சட்னிக்கு தக்காளி கிடையாது… தக்காளி சாஸை பயன்படுத்த வேண்டியது தான்…

 

சமையலில் அத்தியாவசிய பொருளாக இருக்கும் தக்காளியின் விலை கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரி மக்கள் தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் வங்கி குழம்பு வைப்பது, சட்னி அரைப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.

 

இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளியின் விலை இரட்டை சதத்தை தொட்டுள்ள நிலையில் ஆசியாவில் பெரிய சாந்தையான சென்னை கோயம்பேடு மார்கெட்டிலும் தக்காளியின் விலை சில தினங்களுக்கு முன்னர் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் தக்காளியின் விலை அதிகரித்தும் குறைந்தும் விற்பனை செய்யப்படுகின்றது.

 

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி சென்னை கோயம்பேடு சந்தையில் 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை குறைந்து கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் தக்காளியின் விலை அதிகரித்து வருவதால் புதுச்சேரி மக்கள் தக்காளிக்கு பதிலாக விலை குறைந்த தக்காளி சாஸை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

 

புதுச்சேரியிலும் தக்காளியின் விலை 180 ரூபாயை எட்டியுள்ள நிலையில் புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதியான பட்டானூரில் ஒரு சிலர் தக்காளி சாஸ் வாங்கி அதை தக்காளி சட்னிக்கும், குழம்புக்கும், ரசத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

 

இது குறித்து வாடிக்கையாளர் ஒருவர் “தற்போது தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் தினக்கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் குடும்பங்களும் நடுத்தர மக்களும் சமையலுக்கு தக்காளி வாங்கி பயன்படுத்துவதை குறைத்து கொண்டு வருகின்றனர். ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 110 கிராம் எடையுள்ள தக்காளி சாஸ் 15 ரூபாய்க்கு கிடைக்கின்றது.

 

100 கிராம் உள்ள தக்காளி சாஸ் தயாரிக்க 300 கிராம் முதல் அரை கிலோ தக்காளி வரை தேவைப்படுகின்றது. இதனால் அரை கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு வாங்குவதற்கு பதில் 15 ரூபாய்க்கு தக்காளி சாஸ் வாங்கி பயன்படுத்தினால் பணம் மிச்சமாகின்றது. மளிகைக் கடைகளில் விற்கப்படும் தக்காளி சாஸில் இனிப்பு சுவை உள்ளது. இதனுடன் புளி, மிளகாய் சேர்த்து பயன்படுத்தும் பொழுது இயற்கையான சுவையை பெற முடியும்” என்று அவர் கூறினார். இதனால் பட்டானூர் பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ்க்கு மாறியுள்ளனர்.