மாநில தொழில்நெறி வழிகா ட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் அவர்கள் குரூப் 4 தேர்விற்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.
பா. விஷ்ணு சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் அரசு தரப்பில் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்ட வருகிறது. இவ்வாறு கற்றுக் கொடுக்கப்படும் வகுப்புகளுக்கு திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை பயிற்சியாளராக நியமித்து வகுப்புகள் நடத்தப்படுவதாக தெரிவித்தவர், மாணவர்கள் இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு இலவசமாக தங்களுடைய போட்டி தேர்வுகளுக்கான முழு பலனையும் பெறலாம் என தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை எடுக்கப்படுவதாகவும் இதில் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் போன்றவை வழங்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
குரூப் 4 தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் இதுபோன்ற அரசினுடைய இலவச வகுப்புகளில் இணைந்து இலவசமாக பயிற்சி பெற விரும்பினால் கீழுள்ள முகவரியை அணுகலாம் என இயக்குனர் பா. விஷ்ணு சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
முகவரி :-
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்.
A-28, முதல் தளம், டான்சி கட்டிடம்.
திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி,
சென்னை- 32.
அலைபேசி எண் : 044-22500134, 9361566648