மக்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! இனி அனைவருக்கும் ரேஷன் கார்டு!!
நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் குறைவான விலையில் தமிழக அரசால் வழங்கப்படும் ஒரு இடம் தான் நியாய விலைக்கடை.
இங்கு ஒவ்வொரு மாதமும் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மொத்தம் 85 சதவிகிதம் கொண்ட கிராமப்புற மக்களும் மற்றும் ஐம்பது சதவிகிதம் கொண்ட நகர்ப்புற மக்களும் ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்.
ஆனால் சில காரணங்களால் இந்த சதவிகிதம் மக்களுக்கு மாநில அரசானது ஈடு செய்யப்படாமல் இருந்தது. தற்போது உயர் ஆண்டு வருமான வரி வரம்பு தளர்வின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி அதிகமான மக்களை இதில் சேர்ப்பதற்கு முடிவு செய்துள்ளது.
உயர் வருமான வரம்பானது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாயாக மட்டுமே இருந்தது. பிறகு அதனை மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் தற்போது அசாம் மாநில மக்களுக்கான ரேஷன் அட்டைதார்களுக்கு இருந்த ஆண்டு வருமான வரம்பானது 2.50 லட்சம் ரூபாயில் இருந்து நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலமாக ஏராளமான மக்கள் ரேஷன் அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய அறிவிப்பு அசாம் மாநில மாக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.