வீடியோ: இனி மனிதர்களும் காற்றில் பறக்கலாம்! சாதனம் கண்டுபிடிப்பு!

Photo of author

By Kowsalya

ஆஸ்திரேலியாவில் ஆய்வாளர்கள் மனிதர்கள்  பறவைகளைப் போல மனிதர்களும் பறப்பதற்கு “காப்டர் பேக்” என்ற ஒரு சாதனத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

 

இதைப் பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

இந்த சாதனமானது ஹெலிகாப்டரில் பயன்படுத்தப்படும் மோட்டார்கள் மற்றும் விசிறி மற்றும் ரோட்டார் போன்ற அமைப்புகளால் உருவாக்கப்பட்டது. இந்த சாதனம் மனிதனின் முதுகில் பொருத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட உயரம் வரை பறக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

அதுமட்டுமின்றி ஏதேனும் கோளாறு நடந்து விபத்துக்குள்ளாகும் நேரத்தில் காப்டர் பேக்கிலிருந்து பாராசூட் உடனடியாக திறந்து உயிரை காப்பாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது கார்பன் பைபர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த சில ஆண்டுகளாக இந்த பறக்கும் சாதனத்தை பரிசோதிக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடலின் மீது நடத்தப்பட்ட ஒரு சோதனையில் காப்டர் பேக் வெற்றி அடைந்துள்ளது.

அந்த காப்டர் பேர் பொருத்திக் கொண்ட ஒரு நபரை குறிப்பிட்ட தூரம் வரை கடல் மேல் பறக்க செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மாபெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.