செறிவூட்டப்பட்ட அரிசிகளுக்கு 18 சதவிகிதமாக இருந்த ஜிஎஸ்டி வரி தற்பொழுது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக மக்களினுடைய சத்து குறைபாடு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் அரிசியின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று டிசம்பர் 21ஆம் தேதி அன்று நடைபெற்ற ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் உணவுப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை அவற்றின் தரம் மற்றும் நிலை பொறுத்து பல்வேறு பொருட்களின் ஜிஎஸ்டி வழியானது குறைக்கப்பட்டும் மற்றும் பல பொருட்களின் ஜிஎஸ்டி வழியானது அதிகரிக்கப்பட்டும் இருப்பதை தெரிவித்தார்.
அதில் பாப்கான்களின் சுவைகளுக்கு ஏற்றவாறு அவற்றின் உடைய ஜிஎஸ்டி வரியானது 5% முதல் 18 % வரை வரையறை செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மக்களின் முக்கிய உணவுப் பொருளான அரிசியின் மீது இருந்த 18 சதவீதம் GST வரியை தற்பொழுது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது 1600 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும் அரிசி மூட்டைகளின் விலை ஆனது இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பின் காரணமாக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அரிசி முட்டைகளின் விலைகள் குறையும் தருணத்தில் பல மக்களினுடைய தேவையானது பூர்த்தி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது எதிர்பார்க்கப்படுகிறது.