வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை!!

Photo of author

By Divya

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை!!

Divya

Updated on:

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை

 

 

மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் ஹடப்சர் மகாடா காலனியை சேர்ந்தவர் இம்தியாஸ் சேக் ki.இதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபர் கடந்த ஆண்டு சொந்த காரணங்களுக்காக இவரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார்.இந்நிலையில் சில காரணங்களால் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியாத நபரை கொலை செய்து விடுவதாக இம்தியாஸ் சேக் மிரட்டி வந்துள்ளார்.

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் கடன் வாங்கியவரை தொடர்பு கொண்டு மனைவியுடன் மகாடா காலனியில் உள்ள வீட்டிற்கு வருமாறு தெரிவித்தார். இதன்படி அந்நபரும் தன் மனைவியை அழைத்து கொண்டு இம்தியாஸ் சேக் வீட்டிற்கு சென்றார்.

 

 

இந்நிலையில் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கணவரின் கண் முன்னே அவரது மனைவியை இம்தியாஸ் சேக் பலாத்காரம் செய்தார்.இதனை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார்.மேலும் பணத்தை திருப்பி தரும் வரையில் தன்னிடம் உல்லாசமாக இருக்க வருமாறு பெண்ணை இம்தியாஸ் சேக் மிரட்டி உள்ளார்.

தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் ஒரு கட்டத்தில் அப்பெண் மறுப்பு தெரிவிக்க இம்தியாஸ் சேக் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி சம்பவம் குறித்து ஹடப்சர் போலீசில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து இம்தியாஸ் சேக்கை அதிரடியாக கைது செய்தனர்.பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.