ரிஷப் பண்ட், ஹர்ஷல் படேல் தேவையில்லை… ஹர்பஜன் சிங் வெளியிட்ட ஆடும் லெவன்!

0
151

ரிஷப் பண்ட், ஹர்ஷல் படேல் தேவையில்லை… ஹர்பஜன் சிங் வெளியிட்ட ஆடும் லெவன்!

இந்திய அணி அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தானை தங்கள் முதல் போட்டியில் எதிர்கொள்ள உள்ளது.

2022 டி20 உலகக் கோப்பை இந்த முறை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நடக்கிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், தலா இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் போட்டியிடும் தேர்வுப் போட்டிகள் நடக்க உள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்து பல்வேறு கணிப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக ஆறாவது இடத்தில் ரிஷப் பண்ட்டா அல்லது தினேஷ் கார்த்திக்கா என்ற குழப்பம் நிலவும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய ஆடும் லெவன் அணியை வெளியிட்டுள்ளார்.

அதில் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு அவர் இடம் அளிக்கவில்லை. அவர் தேர்வு செய்த அணி விவரம்

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பைப் போலவே இந்த முறையும்  முதல் போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்வதால் போட்டி மிகுந்த சவாலான ஒன்றாக இரு அணி வீரர்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Previous articleகவலையின்றி சுற்றி திரிந்த தம்பதி! கூண்டோடு தூக்கிய போலீசார்!
Next articleதீபாவளி முடிச்சுட்டு அடுத்த கட்ட ஷூட்டுக்கு தயாராகும் சூர்யா 42 குழு!