“கே எல் ராகுல தூக்கிட்டு பண்ட்ட ஓப்பனிங் இறக்கலாம்…” முன்னாள் வீரரின் அதிரடி கருத்து!

0
202

“கே எல் ராகுல தூக்கிட்டு பண்ட்ட ஓப்பனிங் இறக்கலாம்…” முன்னாள் வீரரின் அதிரடி கருத்து!

இந்திய அணியின் துணைக் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான கே எல் ராகுல் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்.

இந்திய அணி உலகக்கோப்பை சூப்பர் 12 லீக்கில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் சொதப்பலால் போட்டியை இழந்தது.

இந்த மூன்று போட்டிகளிலும் கே எல் ராகுல் மோசமாக விளையாடியுள்ளார். அவரின் அதிகபட்ச ரன்களே 16 ரன்கள்தான். மோசமான தொடக்கம் காரணமாக அடுத்து வரும் விராட் கோலி போன்றவர்கள் கூடுதல் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி கடினமான முடிவு ஒன்றை எடுத்து கே எல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் “கே எல் ராகுல் இதே போல தடுமாறினால், இந்திய அணி அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை களமிறக்க யோசிக்கக் கூடாது. அல்லது தீபக் கூடாவுக்கு பதிலாக ரிஷப் பண்ட் எடுக்கப்படவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

கே எல் ராகுல் பற்றி சில தினங்களுக்கு முன்னர் பேசிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோ “ராகுலுக்கு மாற்று வீரராக நாங்கள் யாரையும் யோசிக்கக் கூட இல்லை. வெறும் இரண்டு போட்டிகளை வைத்து அவரைப் போன்ற ஒரு சிறந்த பேட்ஸ்மேனைக் குறை சொல்வது சரியில்லை. அவர் வலைப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை நீக்க வேண்டிய தேவை அணிக்கு இல்லை” எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி நடவடிக்கை! தலைமை செயல் அதிகாரியாக  நான் இருகின்றேன்!
Next articleஜப்பானில் வசூல்மழை பொழியும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்! முதல் வரா கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here