ரோஹித் ஷர்மாவை தகாத வார்த்தையில் திட்டினாரா ஹர்திக் பாண்டியா?… சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ!

0
135

ரோஹித் ஷர்மாவை தகாத வார்த்தையில் திட்டினாரா ஹர்திக் பாண்டியா?… சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷ்ரமாவிடம் அவமரியாதையாக நடந்துகொண்டுள்ளதாக ஹர்திக் பாண்ட்யா மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாடி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வென்ற நிலையில் நேற்று நடந்த கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 117 ரன்கள் சேர்த்து கலக்கினார். இந்நிலையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டியின் போது ரோஹித் ஷர்மா பீல்டிங் செய்யும்போது ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை மாற்றியதால் அதிருப்தியான அவர் தகாத வார்த்தைகளால் ரோஹித் ஷர்மாவை திட்டியுள்ளார். இது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக கேட்டுள்ளது. இந்த வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவ #hardikabusepandya என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது. பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் ஹர்திக் பாண்ட்யாவைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய மூன்றாவது போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதியில் பிரமோற்சவ விழா!
Next articleமத்திய அரசின் வேலைகளில் பணியாற்ற விருப்பமா? உங்களுக்கான வாய்ப்பு தான் இது உடனே விண்ணப்பியங்கள்!