ஒரே போட்டியில் தோனி & யுவ்ராஜ் சாதனைகளை தகர்த்த ஹர்திக் பாண்ட்யா!

0
174

ஒரே போட்டியில் தோனி & யுவ்ராஜ் சாதனைகளை தகர்த்த ஹர்திக் பாண்ட்யா!

ஹர்திக் பாண்ட்யா ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கடைசி கட்டத்தில் பதற்றப்படாமல் இயல்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் அவர் இரு சாதனைகளை தகர்த்துள்ளார். அதுவும் இந்திய டி 20 கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான தோனி மற்றும் யுவ்ராஜ் ஆகியோரின் சாதனையை.

சர்வதேச டி 20 போட்டிகளில் அதிகமுறை 30 ரன்கள் மற்றும் 3 விக்கெட்கள் வீழ்த்திய வீரர்களில் பட்டியலில் யுவ்ராஜ் சிங்கை பின்னுக்குத் தள்ளி ஹர்திக் பாண்ட்யா முதல் இடத்துக்கு சென்றுள்ளார். யுவ்ராஜ் 2 முறையும், ஹர்திக் பாண்ட்யா மூன்று முறையும் இதை செய்துள்ளனர்.

அதே போல 16 முதல் 20 ஒவர் வரையிலான இறுதிக் கட்ட ஓவர்களில் அதிக சிக்ஸர் விளாசிய இந்திய வீரர்களில் பட்டியலில் அவர் தோனியை சமன் செய்துள்ளார். இருவரும் 34 சிக்ஸர்களோடு உள்ளனர். விரைவில் தோனியை அவர் முந்திவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous article“கோலியின் ஷாட்டால் அவரே அப்செட் ஆகி இருப்பார…” முன்னாள் வீரர் சொன்ன கருத்து!
Next articleலைகா தயாரிப்பாளரோடு அஜித்தின் திடீர் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்!